Posts

குர்ஆனை கற்றவர்

 بسم الله الرحمن الرحيم  عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: مَنْ قَرَأَ الْقُرْآنَ فَقَدِ اسْتَدْرَجَ النُّبُوَّةَ بَيْنَ جَنْبَيْهِ غَيْرَ أَنَّهُ لاَ يُوحَي إِلَيْهِ لاَ يَنْبَغِي لِصَاحِبِ الْقُرْآنِ أَنْ يَجِدَ مَعَ مَنْ وَجَدَ وَلاَ يَجْهَلَ مَعَ مَنْ جَهِلَ وَفِي جَوْفِهِ كَلاَمُ اللهِ. رواه الحاكم எவர் குர்ஆனைக் கற்றாரோ அவர் நபித்துவ ஞானங்களைத் தமது விலா எலும்புகளுக்கு மத்தியில் அமைத்துக் கொள்கிறார், ஆயினும் அவருக்கு வஹீ மட்டும் வருவதில்லை. குர்ஆனை மனனம் செய்தவருக்கு கோபம் கொள்வோருடன் சேர்ந்து கோபங் கொள்வதும், அறிவற்றோருடன் சேர்ந்து அறிவற்ற முறையில் நடந்து கொள்வதும் முறையல்ல, ஏனென்றால், அவர் தமக்குள் அல்லாஹ்வின் வசனங்களைச் சுமந்திருக்கிறார்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ருப்னு ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்:முஸ்தத்ரக் ஹாகிம்)

சுவனத்தில் நுழைவிக்கும் அமல்

 بسم الله الرحمن الرحيم  عَنْ مُعَاذٍؓ قَالَ: يَا رَسُوْلَ اللهِ مُرْنِيْ بِعَمَلٍ يُدْخِلُنِيَ الْجَنَّةَ قَالَ: آمِنْ بِاللهِ وَقُلْ خَيْرًا، يُكْتَبُ لَكَ وَلاَ تَقُلْ شَرًّا فَيُكْتَبُ عَلَيْكَ. رواه الطبراني யாரஸூலல்லாஹ், சொர்க்கத்தில் நுழையவைக்கும் ஓர் அமலை எனக்குச் சொல்லித்தாருங்கள் என்று நான் கேட்டேன், அல்லாஹுதஆலாவின் மீது ஈமான் கொள்வீராக! நல்ல வார்த்தைகளையே பேசுவீராக! உமக்கு நன்மை எழுதப்படும். தீய வார்த்தைகளைப் பேசாதீர் (அவ்வாறு பேசிவிட்டால்) உமக்குத் தீமை எழுதப்படும்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் முஆத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: தப்ரானீ)

நரகத்திலிருந்து காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்

 بسم الله الرحمن الرحيم عَنْ أَنَسٍؓ قَالَ: كَانَ غُلاَمٌ يَهُودِيٌّ يَخْدُمُ النَّبِيَّ ﷺ فَمَرِضَ فَأَتَاهُ النَّبِيُّ ﷺ يَعُودُهُ، فَقَعَدَ عِنْدَ رَأْسِهِ فَقَالَ لَهُ: أَسْلِمْ، فَنَظَرَ إِلي أَبِيهِ وَهُوَ عِنْدَهُ فَقَالَ لَهُ: أَطِعْ أَبَا الْقَاسِمِ ﷺ،فَأَسْلَمَ فَخَرَجَ النَّبِيُّ ﷺ وَهُوَ يَقُولُ: اَلْحَمْدُ لِلّهِ الَّذِي أَنْقَذَهُ مِنَ النَّارِ رواه البخاري ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், யூதச் சிறுவன் ஒருவன் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்து வந்தான். அவன் நோயுற்றபோது ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அவனை நலன் விசாரிக்கச் சென்றார்கள். நபி (ஸல்) அவர்கள் அவனது தலைப் பக்கம் அமர்ந்தார்கள், நீ முஸ்லிமாகிவிடு'' என்றார்கள். அவன் தனக்கருகில் நின்றிருந்த தன் தந்தையைப் பார்த்தான், அவன் தந்தை, அபுல்காஸிம் (ஸல்) அவர்களுக்கு வழிப்படு!'' என்று சொன்னார். எனவே அவன் முஸ்லிமாகிவிட்டான். இந்தச் சிறுவனை (நரக) நெருப்பை விட்டும் காப்பாற்றிய அல்லாஹுதஆலாவுக்கே எல்லாப் புகழும்!'' என்று கூறியவர்களாக நபி (ஸல்) அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறினார்கள். (நூல்:புக...

சுவனத்தில் நுழைவிக்கும் மூன்று செயல்கள்

 இக்ராமுல் முஸ்லிமீன் - முஸ்லிமின் தகுதி  عَنْ جَابِرٍ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: ثَلاَثٌ مَنْ كُنَّ فِيهِ نَشَرَ اللهُ عَلَيْهِ كَنَفَهُ وَأَدْخَلَهُ الْجَنَّةَ: رِفْقٌ بِالضَّعِيفِ، وَالشَّفَقَةُ عَلَي الْوَالِدَيْنِ، وَالْإِحْسَانُ إِلَي الْمَمْلُوكِ. رواه الترمذي وقال: هذا حديث حسن غريب باب فيه اربعة احاديث ....:رقم:٢٤٩٤ மூன்று நற்பண்புகள் யாரிடம் உள்ளனவோ அவருக்கு அல்லாஹுதஆலா (கியாமத் நாளன்று) தன் அருள் என்னும் நிழலில் இடமளிப்பான். மேலும், அவரைச் சுவர்க்கத்தில் நுழையச் செய்வான். அவை, பலவீனர்களுடன் நளினமாக நடந்து கொள்ளுதல், பெற்றோருடன் கருணை காட்டுதல், அடிமைக்கு (வேலையாட்களுக்கு) உபகாரம் செய்தல்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (திர்மிதீ)

பொறுமையின் நன்மை

 بسم الله الرحمن الرحيم  عَنْ اُسَامَةَؓ قَالَ: كُنْتُ عِنْدَ النَّبِيِّ ﷺ اِذْ جَاءَهُ رَسُوْلُ اِحْدَي بَنَاتِهِ وَعِنْدَهُ سَعْدٌ واُبَيُّ بْنُ كَعْبٍ وَمُعَاذٌؓ اَنَّ ابْنَهَا يَجُوْدُ بِنَفْسِهِ فَبَعَثَ اِلَيْهَا: لِلّهِ مَا اَخَذَ، وَلِلّهِ مَا اَعْطَي، كُلٌّ بِاَجَلٍ، فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ. رواه البخاري ஹஜ்ரத் உஸாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நானும், ஹஜ்ரத் ஸஃது, ஹஜ்ரத் உபையிப்னு கஅப், ஹஜ்ரத் முஆத் (ரலி) ஆகியோர் நபி (ஸல்) அவர்களின் சபையில் இருந்தபோது, நபி (ஸல்) அவர்களுடைய பெண் மக்களில் ஒருவருடைய குழந்தை உயிர் பிரியும் நிலையில் உள்ளது'' என்ற செய்தியை ஒருவர் வந்து சொன்னார்.அல்லாஹுதஆலா எடுத்துக் கொண்டது அவனுக்கே உரியது! அவன் நமக்குத் தந்ததும் அவனுக்கே உரியது! அவனிடத்தில் ஒவ்வொன்றுக்கும் நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, பொறுமையை மேற்கொள்ளவும். மேலும் இந்தத் துன்பத்தின் மீது பொறுமையை மேற்கொள்வதால் அல்லாஹுதஆலா வாக்களித்த வெகுமதிகள் கிடைக்கும் என்று அல்லாஹ்விடம் ஆதரவு வைக்கவும்'' என்று வந்தவரிடம் நபி (ஸல்) அவர்கள் தன் மகளுக்குச் சொல்லி அனுப்பினார்கள். (நூ...

மக்களில் சிறந்த மனிதர்

 இக்ராமுல் முஸ்லிமீன் - முஸ்லிமின் தகுதி ١٣- عَنْ سَهْلِ بْنِ سَعْدِ نِ السَّاعِدِيِّ ؓ أَنَّهُ قَالَ: مَرَّ رَجُلٌ عَلَي رَسُولِ اللهِ ﷺ فَقَالَ لِرَجُلٍ عِنْدَهُ جَالِسٍ: مَارَأْيُكَ فِي هذَا؟ فَقَالَ: رَجُلٌ مِنْ أَشْرَافِ النَّاسِ، هذَا وَاللهِ حَرِيٌّ إِنْ خَطَبَ أَنْ يُنْكَحَ، وَإِنْ شَفَعَ أَنْ يُشَفَّعَ، قَالَ: فَسَكَتَ رَسُولُ اللهِ ﷺ ثُمَّ مَرَّ رَجُلٌ فَقَالَ لَهُ رَسُولُ اللهِ ﷺ: مَا رَأْيُكَ فِي هذَا؟ فَقَالَ: يَارَسُولَ اللهِﷺ هذَا رَجُلٌ مِنْ فُقَرَاءِ الْمُسْلِمِينَ، هذَا حَرِيٌّ إِنْ خَطَبَ أَنْ لاَ يُنْكَحَ، وَإِنْ شَفَعَ أَنْ لاَ يُشَفَّعَ، وَإِنْ قَالَ أَنْ لاَ يُسْمَعَ لِقَوْلِهِ، فَقَالَ رَسُولُ اللهِ ﷺ: هذَا خَيْرٌ مِنْ مِلْءِ الأَرْضِ مِثْلَ هذَا. رواه البخاري باب فضل الفقر رقم:٦٤٤٧ 13.ஹஜ்ரத் ஸஹ்லு இப்னு ஸஃத் ஸாஇதீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ஒருவர் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களைக் கடந்து சென்ற போது, நபி (ஸல்) அவர்கள் தமக்கு அருகில் அமர்ந்திருந்த ஒருவரிடம், ''இவரைப் பற்றி உம்முடைய கருத்து என்ன?'' என்று கேட்டார்கள். இவர் கண்ணியவான்களில் ஒருவர், அல்...

ஏழைகளுக்கு அல்லாஹ் அளிக்கும் பரிசு

 இக்ராமுல் முஸ்லிமீன் - முஸ்லிமின் தகுதி ٦- عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو ؓ عَنْ رَسُولِ اللهِ ﷺ أَنَّهُ قَالَ: هَلْ تَدْرُونَ مَنْ أَوَّلُ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ مِنْ خَلْقِ اللهِ؟ قَالُوا: اَللّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: أَوَّلُ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ مِنْ خَلْقِ اللهِ الْفُقَرَاءُ الْمُهَاجِرُونَ الَّذِينَ يُسَدُّ بِهِمُ الثُّغُورُ، وَتُتَّقَي بِهِمُ الْمَكَارِهُ، وَيَمُوتُ أَحَدُهُمْ وَحَاجَتُهُ فِي صَدْرِهِ لاَيَسْتَطِيعُ لَهَا قَضَاءً، فَيَقُولُ اللهُ لِمَنْ يَشَاءُ مِنْ مَلاَئِكَتِهِ: إِيتُوهُمْ فَحَيُّوهُمْ، فَيَقُولُ الْمَلاَئِكَةُ: رَبَّنَا نَحْنُ سُكَّانُ سَموَاتِكَ وَخِيَرَتُكَ مِنْ خَلْقِكَ، أَفَتَأْمُرُنَا أَنْ نَأْتِيَ هؤُلاَءِ فَنُسَلِّمَ عَلَيْهِمْ؟ قَالَ: إِنَّهُمْ كَانُوا عِبَاداً يَعْبُدُونِي لاَيُشْرِكُونَ بِي شَيْئاً، وَتُسَدُّ بِهِمُ الثُّغُورُ، وَتُتَّقَي بِهِمُ الْمَكَارِهُ، وَيَمُوتُ أَحَدُهُمْ وَحَاجَتُهُ فِي صَدْرِهِ لاَيَسْتَطِيعُ لَهَا قَضَاءً قَالَ: فَتَأْتِيهِمُ الْمَلاَئِكَةُ عِنْدَ ذلِكَ فَيَدْخُلُونَ عَلَيْهِمْ مِنْ كُلِّ بَابٍ: سَلاَمٌ ...