ஏழைகளுக்கு அல்லாஹ் அளிக்கும் பரிசு
இக்ராமுல் முஸ்லிமீன் - முஸ்லிமின் தகுதி
٦- عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو ؓ عَنْ رَسُولِ اللهِ ﷺ أَنَّهُ قَالَ: هَلْ تَدْرُونَ مَنْ أَوَّلُ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ مِنْ خَلْقِ اللهِ؟ قَالُوا: اَللّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: أَوَّلُ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ مِنْ خَلْقِ اللهِ الْفُقَرَاءُ الْمُهَاجِرُونَ الَّذِينَ يُسَدُّ بِهِمُ الثُّغُورُ، وَتُتَّقَي بِهِمُ الْمَكَارِهُ، وَيَمُوتُ أَحَدُهُمْ وَحَاجَتُهُ فِي صَدْرِهِ لاَيَسْتَطِيعُ لَهَا قَضَاءً، فَيَقُولُ اللهُ لِمَنْ يَشَاءُ مِنْ مَلاَئِكَتِهِ: إِيتُوهُمْ فَحَيُّوهُمْ، فَيَقُولُ الْمَلاَئِكَةُ: رَبَّنَا نَحْنُ سُكَّانُ سَموَاتِكَ وَخِيَرَتُكَ مِنْ خَلْقِكَ، أَفَتَأْمُرُنَا أَنْ نَأْتِيَ هؤُلاَءِ فَنُسَلِّمَ عَلَيْهِمْ؟ قَالَ: إِنَّهُمْ كَانُوا عِبَاداً يَعْبُدُونِي لاَيُشْرِكُونَ بِي شَيْئاً، وَتُسَدُّ بِهِمُ الثُّغُورُ، وَتُتَّقَي بِهِمُ الْمَكَارِهُ، وَيَمُوتُ أَحَدُهُمْ وَحَاجَتُهُ فِي صَدْرِهِ لاَيَسْتَطِيعُ لَهَا قَضَاءً قَالَ: فَتَأْتِيهِمُ الْمَلاَئِكَةُ عِنْدَ ذلِكَ فَيَدْخُلُونَ عَلَيْهِمْ مِنْ كُلِّ بَابٍ: سَلاَمٌ عَلَيْكُمْ بِمَا صَبَرْتُمْ فَنِعْمَ عُقْبَي الدَّارِ.
رواه ابن حبان (واسناده صحيح):١٦ /٤٣٨
6.ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், அல்லாஹுதஆலாவின் படைப்பினங்களில் முதன்முதலாகச் சுவனம் செல்பவர்கள் யாரென்று உங்களுக்குத் தெரியுமா?'' என்று நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடம் வினவ, அல்லாஹுதஆலாவும் அவனது ரஸூலுமே மிக அறிந்தவர்கள்'' என ஸஹாபாக்கள் (ரலி) பதில் கூறினார்கள்.முதன் முதலாகச் சொர்க்கம் செல்பவர்கள் ஏழை முஹாஜிர்கள், அவர்கள் மூலம் எல்லைப்புறப்பகுதிகள் பாதுகாக்கப்படுகின்றன. சிரமமான வேலைகளில் (அவர்களை முன் வைத்து) அவர்கள் மூலம் பாதுகாப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது. தம்தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் அவர்களுடைய நெஞ்சங்களில் இருக்க அத்தேவைகளை நிறைவேற்ற முடியாத நிலையில் அவர்களுக்கு மரணம் வந்துவிடுகிறது. கியாமத் நாளன்று அல்லாஹுதஆலா மலக்குகளிடம், நீங்கள் அவர்களிடம் சென்று அவர்களுக்கு ஸலாம் சொல்லுங்கள் என்று கூறுவான், மலக்குகள் (ஆச்சரியமடைந்தவர்களாக) எங்கள் இரட்சகனே! நாங்களோ உன்னுடைய வானத்தில் வசிப்பவர்கள், உன்னுடைய படைப்பினங்களில் சிறந்தவர்கள். (அப்படியிருந்தும்) நீ எங்களை அவர்களிடம் சென்று அவர்களுக்கு ஸலாம் சொல்லக் கட்டளையிடுகிறாயே?'' (இதன் காரணமென்ன) என்று வினவுவார்கள். இவர்கள் என்னை வணங்கிக் கொண்டிருந்தவர்கள். எனக்கு வேறு யாரையும் இணை ஆக்காமல் இருந்தவர்கள். இவர்கள் மூலம் எல்லைப் பகுதிகள் பாதுகாக்கப்பட்டன. சிரமமான காரியங்களில் (இவர்களை முன்னிறுத்தி) இவர்கள் மூலம் பாதுகாப்புப் பணி மேற் கொள்ளப்பட்டது. தம் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசை இவர்களின் நெஞ்சங்களில் இருந்த நிலையிலேயே, அத்தேவைகளை நிறைவேற்ற முடியாமல் இவர்களுக்கு மரணம் வந்தது' என்று அல்லாஹுதஆலா கூறுவான். எனவே, மலக்குகள் அச்சமயம் எல்லா வாசல்களிலிருந்தும், நீங்கள் பொறுமையை மேற்கொண்டதால் உங்கள்மீது சாந்தி உண்டாகட்டும்! இவ்வுலகில் உங்கள் முடிவு எவ்வளவு உயர்ந்ததாகி விட்டது!'' என்று கூறியவர்களாக அவர்களிடம் வருவார்கள்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(இப்னு ஹிப்பான்)
Comments
Post a Comment