Posts

Showing posts from November, 2025

நபிக்கு கொடுக்கப்பட்ட சூராக்கள்

عَنْ وَاثِلَةَ بْنِ اْلاَسْقَعِؓ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: أُعْطِيتُ مَكَانَ التَّوْرَاةِ السَّبْعَ وَأُعْطِيتُ مَكَانَ الزَّبُورِ الْمِئِينَ وَأُعْطِيتُ مَكَانَ اْلإِنْجِيلِ الْمَثَانِيَ وَفُضِّلْتُ بِالْمُفَصَّلِ. رواه احمد எனக்கு தவ்ராத் வேதத்திற்குப் பகரமாக புனித குர்ஆனின் ஆரம்ப ஏழு அத்தியாயங்(சூராக்)களும், ஸபூர் வேதத்திற்குப் பகரமாக மிஈன் (அதற்கடுத்துள்ள பதினோரு சூராக்களும்),இன்ஜீல் வேதத்திற்குப் பகரமாக மஸானீ (அதற்கடுத்துள்ள இருபது ஸூராக்களும்) கிடைத்துள்ளன. அதற்குப் பிறகு குர்ஆனின் இறுதி வரை உள்ள முஃபஸ்ஸல் ஸூராக்கள் எனக்கென்றே குறிப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளன என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் வாஸிலத்துப்னு அஸ்கஃ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்:முஸ்னத் அஹ்மத்)

சிறிய நன்மையையும் சாதாரணமாக கருத வேண்டாம்

 بسم الله الرحمن الرحيم عَنْ اَبِيْ ذَرٍّ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: لاَ يَحْقِرَنَّ اَحَدُكُمْ شَيْئًا مِنَ الْمَعْرُوْفِ، وَاِنْ لَمْ يَجِدْ فَلْيَلْقَ اَخَاهُ بِوَجْهٍ طَلِيْقٍ، وَاِنِ اشْتَرَيْتَ لَحْمًا اَوْ طَبَخْتَ قِدْرًا فَاكْثِرْ مَرَقَتَهُ وَاغْرِفْ لِجَارِكَ مِنْهُ. رواه الترمذي உங்களில் எவரும் ஒரு சிறிய நன்மையையும் சாதாரணமாகக் கருத வேண்டாம், எவ்வித நன்மையும் செய்ய இயலவில்லை என்றால், தன் சகோதரனை இன்முகத்துடன் சந்திப்பதும் நன்மைதான். சமைக்க நீங்கள் மாமிசம் வாங்கினாலோ அல்லது ஏதேனும் குழம்பு சமைத்தாலோ அதன் அளவை அதிகப்படுத்துங்கள், அதில் சிறிதளவு உங்கள் அண்டை வீட்டாருக்கும் கொடுங்கள்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்:திர்மிதீ)