பொறுமையின் நன்மை
بسم الله الرحمن الرحيم
عَنْ اُسَامَةَؓ قَالَ: كُنْتُ عِنْدَ النَّبِيِّ ﷺ اِذْ جَاءَهُ رَسُوْلُ اِحْدَي بَنَاتِهِ وَعِنْدَهُ سَعْدٌ واُبَيُّ بْنُ كَعْبٍ وَمُعَاذٌؓ اَنَّ ابْنَهَا يَجُوْدُ بِنَفْسِهِ فَبَعَثَ اِلَيْهَا: لِلّهِ مَا اَخَذَ، وَلِلّهِ مَا اَعْطَي، كُلٌّ بِاَجَلٍ، فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ.
رواه البخاري
ஹஜ்ரத் உஸாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நானும், ஹஜ்ரத் ஸஃது, ஹஜ்ரத் உபையிப்னு கஅப், ஹஜ்ரத் முஆத் (ரலி) ஆகியோர் நபி (ஸல்) அவர்களின் சபையில் இருந்தபோது, நபி (ஸல்) அவர்களுடைய பெண் மக்களில் ஒருவருடைய குழந்தை உயிர் பிரியும் நிலையில் உள்ளது'' என்ற செய்தியை ஒருவர் வந்து சொன்னார்.அல்லாஹுதஆலா எடுத்துக் கொண்டது அவனுக்கே உரியது! அவன் நமக்குத் தந்ததும் அவனுக்கே உரியது! அவனிடத்தில் ஒவ்வொன்றுக்கும் நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, பொறுமையை மேற்கொள்ளவும். மேலும் இந்தத் துன்பத்தின் மீது பொறுமையை மேற்கொள்வதால் அல்லாஹுதஆலா வாக்களித்த வெகுமதிகள் கிடைக்கும் என்று அல்லாஹ்விடம் ஆதரவு வைக்கவும்'' என்று வந்தவரிடம் நபி (ஸல்) அவர்கள் தன் மகளுக்குச் சொல்லி அனுப்பினார்கள்.
(நூல்:புகாரி)
Comments
Post a Comment