மக்களில் சிறந்த மனிதர்
இக்ராமுல் முஸ்லிமீன் - முஸ்லிமின் தகுதி
١٣- عَنْ سَهْلِ بْنِ سَعْدِ نِ السَّاعِدِيِّ ؓ أَنَّهُ قَالَ: مَرَّ رَجُلٌ عَلَي رَسُولِ اللهِ ﷺ فَقَالَ لِرَجُلٍ عِنْدَهُ جَالِسٍ: مَارَأْيُكَ فِي هذَا؟ فَقَالَ: رَجُلٌ مِنْ أَشْرَافِ النَّاسِ، هذَا وَاللهِ حَرِيٌّ إِنْ خَطَبَ أَنْ يُنْكَحَ، وَإِنْ شَفَعَ أَنْ يُشَفَّعَ، قَالَ: فَسَكَتَ رَسُولُ اللهِ ﷺ ثُمَّ مَرَّ رَجُلٌ فَقَالَ لَهُ رَسُولُ اللهِ ﷺ: مَا رَأْيُكَ فِي هذَا؟ فَقَالَ: يَارَسُولَ اللهِﷺ هذَا رَجُلٌ مِنْ فُقَرَاءِ الْمُسْلِمِينَ، هذَا حَرِيٌّ إِنْ خَطَبَ أَنْ لاَ يُنْكَحَ، وَإِنْ شَفَعَ أَنْ لاَ يُشَفَّعَ، وَإِنْ قَالَ أَنْ لاَ يُسْمَعَ لِقَوْلِهِ، فَقَالَ رَسُولُ اللهِ ﷺ: هذَا خَيْرٌ مِنْ مِلْءِ الأَرْضِ مِثْلَ هذَا.
رواه البخاري باب فضل الفقر رقم:٦٤٤٧
13.ஹஜ்ரத் ஸஹ்லு இப்னு ஸஃத் ஸாஇதீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ஒருவர் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களைக் கடந்து சென்ற போது, நபி (ஸல்) அவர்கள் தமக்கு அருகில் அமர்ந்திருந்த ஒருவரிடம், ''இவரைப் பற்றி உம்முடைய கருத்து என்ன?'' என்று கேட்டார்கள். இவர் கண்ணியவான்களில் ஒருவர், அல்லாஹ் மீது ஆணையாக! இவர் எவரிடத்திலேனும் பெண் கேட்டால், திருமணம் செய்து வைக்கப்படும். எவருக்கேனும் இவர் பரிந்து பேசினால், இவர் பரிந்து பேசுவது ஏற்றுக் கொள்ளப்படும் தகுதி வாய்ந்தவர்'' என அவர் கூறினார். நபி (ஸல்) அவர்கள் அதைக் கேட்டு மௌனமாகி விட்டார்கள், அதற்குப் பிறகு இன்னோருவர் அந்த வழியாகச் சென்றார். நபி (ஸல்) அவர்கள் அந்த மனிதரிடம், இவரைப் பற்றி உமது கருத்து என்ன?'' என்று கேட்டார்கள். யாரஸூலல்லாஹ், இவர் ஒர் ஏழை முஸ்லிம், இவர் ஏதேனும் ஓர் இடத்தில் பெண் கேட்டால் திருமணம் செய்து வைக்கப்படமாட்டாது. எவருக்கேனும் பரிந்து பேசினால், அவரது பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது, இவர் பேசினால் இவர் பேச்சு கேட்கப்படமாட்டாது'' என்று சொன்னார். முந்தைய மனிதரைப் போன்றவர்கள் உலகம் முழுவதும் நிரம்பிவிட்டாலும் அவர்கள் அனைவரையும் விட இந்த மனிதர் மேலானவர்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி)
Comments
Post a Comment