Posts

பேக்கரி பிஸ்னஸ் ஆரம்பிப்பது எப்படி

Image
  பேக்கரி பிஸ்னஸ் ஆரம்பிப்பது நல்ல லாபம் தரக்கூடிய தொழில். கீழே Step-by-Step ஆக எளிதாக விளக்குகிறேன் 👇 🥖 1. பிஸ்னஸ் வகையை தேர்வு செய்யுங்கள் முதலில் எப்படிப் பேக்கரி நடத்தப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள்: 🏪 சிறிய கடை பேக்கரி ( Tea shop + bakery) 🏠 Home bakery (வீட்டிலிருந்தே கேக், பஃப்) 🎂 Cake specialty bakery 🕌 Halal bakery (முஸ்லிம் area-க்கு நல்ல demand) 📍 2. இடம் தேர்வு (Location) பள்ளி, கல்லூரி அருகில் பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட் பகுதி   குடியிருப்பு பகுதி 👉 Foot traffic அதிகமாக இருக்க வேண்டும். 📄 3. தேவையான லைசன்ஸ் & பதிவு இந்த லைசன்ஸ் அவசியம்: 1. FSSAI License (Food Safety) 2. Shop Act License 3. GST (Turnover ₹20 லட்சம் மேல்) 4. Udyam Registration ( MSME ) – அரசு உதவிக்கு 🍞 4. என்னென்ன பொருட்கள் விற்கலாம்? ஆரம்பத்தில் அதிக items வேண்டாம்: Bread, Bun Cake (Egg / Eggless) Puff, Samosa Biscuit, Rusk Cool drinks, Tea, Coffee 🔥 5. தேவையான உபகரணங்கள் சிறிய பேக்கரிக்கு: Oven / Baking oven Mixer machine Refrigerator Display showcase Gas stove Baking ...

அமேசான்

Image
 அமேசான் (Amazon) என்றால் என்ன? அமேசான் என்பது உலகின் மிகப் பெரிய இ-காமர்ஸ் (Online Shopping) மற்றும் தொழில்நுட்ப நிறுவனம். 1994-ல் ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) என்பவரால் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் புத்தகங்கள் மட்டும் விற்கும் இணையதளமாக துவங்கினாலும், இன்று உலகளவில் கோடிக்கணக்கான பொருட்கள் விற்கப்படும் மிகப்பெரிய சந்தையாக வளர்ந்துள்ளது. 🔥 Amazon என்னென்ன செய்கிறது? Amazon ஒரு shopping site மட்டும் இல்லை. பல services கொடுக்கிறது: 🛒 1. Online Shopping (இ-காமர்ஸ்) நம்மால் Mobile Laptop Home items Fashion items Toys Groceries ( Amazon Fresh ) இதெல்லாம் வாங்க முடியும். 🚚 2. Amazon Delivery Service பொருட்களை விரைவில் வீட்டிற்கு அனுப்பும் delivery system. 💳 3. Amazon Pay Mobile recharge, bill payment, UPI transfer செய்ய பயன்படும் wallet/UPI service. 🎬 4. Amazon Prime Video Movies, web series, TV shows பார்க்கலாம். 🎵 5. Amazon Music பாடல்கள் கேட்கும் app. ☁️ 6. Amazon Web Services (AWS) Cloud computing service — உலகில் நிறைய பெரிய இணையத்தளங்கள் AWS-ஐ பயன்படுத்துகின்றன. ⭐ மொத்தத்தில்: ...

நபிக்கு கொடுக்கப்பட்ட சூராக்கள்

عَنْ وَاثِلَةَ بْنِ اْلاَسْقَعِؓ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: أُعْطِيتُ مَكَانَ التَّوْرَاةِ السَّبْعَ وَأُعْطِيتُ مَكَانَ الزَّبُورِ الْمِئِينَ وَأُعْطِيتُ مَكَانَ اْلإِنْجِيلِ الْمَثَانِيَ وَفُضِّلْتُ بِالْمُفَصَّلِ. رواه احمد எனக்கு தவ்ராத் வேதத்திற்குப் பகரமாக புனித குர்ஆனின் ஆரம்ப ஏழு அத்தியாயங்(சூராக்)களும், ஸபூர் வேதத்திற்குப் பகரமாக மிஈன் (அதற்கடுத்துள்ள பதினோரு சூராக்களும்),இன்ஜீல் வேதத்திற்குப் பகரமாக மஸானீ (அதற்கடுத்துள்ள இருபது ஸூராக்களும்) கிடைத்துள்ளன. அதற்குப் பிறகு குர்ஆனின் இறுதி வரை உள்ள முஃபஸ்ஸல் ஸூராக்கள் எனக்கென்றே குறிப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளன என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் வாஸிலத்துப்னு அஸ்கஃ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்:முஸ்னத் அஹ்மத்)

சிறிய நன்மையையும் சாதாரணமாக கருத வேண்டாம்

 بسم الله الرحمن الرحيم عَنْ اَبِيْ ذَرٍّ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: لاَ يَحْقِرَنَّ اَحَدُكُمْ شَيْئًا مِنَ الْمَعْرُوْفِ، وَاِنْ لَمْ يَجِدْ فَلْيَلْقَ اَخَاهُ بِوَجْهٍ طَلِيْقٍ، وَاِنِ اشْتَرَيْتَ لَحْمًا اَوْ طَبَخْتَ قِدْرًا فَاكْثِرْ مَرَقَتَهُ وَاغْرِفْ لِجَارِكَ مِنْهُ. رواه الترمذي உங்களில் எவரும் ஒரு சிறிய நன்மையையும் சாதாரணமாகக் கருத வேண்டாம், எவ்வித நன்மையும் செய்ய இயலவில்லை என்றால், தன் சகோதரனை இன்முகத்துடன் சந்திப்பதும் நன்மைதான். சமைக்க நீங்கள் மாமிசம் வாங்கினாலோ அல்லது ஏதேனும் குழம்பு சமைத்தாலோ அதன் அளவை அதிகப்படுத்துங்கள், அதில் சிறிதளவு உங்கள் அண்டை வீட்டாருக்கும் கொடுங்கள்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்:திர்மிதீ)

குர்ஆனை கற்றவர்

 بسم الله الرحمن الرحيم  عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: مَنْ قَرَأَ الْقُرْآنَ فَقَدِ اسْتَدْرَجَ النُّبُوَّةَ بَيْنَ جَنْبَيْهِ غَيْرَ أَنَّهُ لاَ يُوحَي إِلَيْهِ لاَ يَنْبَغِي لِصَاحِبِ الْقُرْآنِ أَنْ يَجِدَ مَعَ مَنْ وَجَدَ وَلاَ يَجْهَلَ مَعَ مَنْ جَهِلَ وَفِي جَوْفِهِ كَلاَمُ اللهِ. رواه الحاكم எவர் குர்ஆனைக் கற்றாரோ அவர் நபித்துவ ஞானங்களைத் தமது விலா எலும்புகளுக்கு மத்தியில் அமைத்துக் கொள்கிறார், ஆயினும் அவருக்கு வஹீ மட்டும் வருவதில்லை. குர்ஆனை மனனம் செய்தவருக்கு கோபம் கொள்வோருடன் சேர்ந்து கோபங் கொள்வதும், அறிவற்றோருடன் சேர்ந்து அறிவற்ற முறையில் நடந்து கொள்வதும் முறையல்ல, ஏனென்றால், அவர் தமக்குள் அல்லாஹ்வின் வசனங்களைச் சுமந்திருக்கிறார்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ருப்னு ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்:முஸ்தத்ரக் ஹாகிம்)

சுவனத்தில் நுழைவிக்கும் அமல்

 بسم الله الرحمن الرحيم  عَنْ مُعَاذٍؓ قَالَ: يَا رَسُوْلَ اللهِ مُرْنِيْ بِعَمَلٍ يُدْخِلُنِيَ الْجَنَّةَ قَالَ: آمِنْ بِاللهِ وَقُلْ خَيْرًا، يُكْتَبُ لَكَ وَلاَ تَقُلْ شَرًّا فَيُكْتَبُ عَلَيْكَ. رواه الطبراني யாரஸூலல்லாஹ், சொர்க்கத்தில் நுழையவைக்கும் ஓர் அமலை எனக்குச் சொல்லித்தாருங்கள் என்று நான் கேட்டேன், அல்லாஹுதஆலாவின் மீது ஈமான் கொள்வீராக! நல்ல வார்த்தைகளையே பேசுவீராக! உமக்கு நன்மை எழுதப்படும். தீய வார்த்தைகளைப் பேசாதீர் (அவ்வாறு பேசிவிட்டால்) உமக்குத் தீமை எழுதப்படும்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் முஆத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: தப்ரானீ)

நரகத்திலிருந்து காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்

 بسم الله الرحمن الرحيم عَنْ أَنَسٍؓ قَالَ: كَانَ غُلاَمٌ يَهُودِيٌّ يَخْدُمُ النَّبِيَّ ﷺ فَمَرِضَ فَأَتَاهُ النَّبِيُّ ﷺ يَعُودُهُ، فَقَعَدَ عِنْدَ رَأْسِهِ فَقَالَ لَهُ: أَسْلِمْ، فَنَظَرَ إِلي أَبِيهِ وَهُوَ عِنْدَهُ فَقَالَ لَهُ: أَطِعْ أَبَا الْقَاسِمِ ﷺ،فَأَسْلَمَ فَخَرَجَ النَّبِيُّ ﷺ وَهُوَ يَقُولُ: اَلْحَمْدُ لِلّهِ الَّذِي أَنْقَذَهُ مِنَ النَّارِ رواه البخاري ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், யூதச் சிறுவன் ஒருவன் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்து வந்தான். அவன் நோயுற்றபோது ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அவனை நலன் விசாரிக்கச் சென்றார்கள். நபி (ஸல்) அவர்கள் அவனது தலைப் பக்கம் அமர்ந்தார்கள், நீ முஸ்லிமாகிவிடு'' என்றார்கள். அவன் தனக்கருகில் நின்றிருந்த தன் தந்தையைப் பார்த்தான், அவன் தந்தை, அபுல்காஸிம் (ஸல்) அவர்களுக்கு வழிப்படு!'' என்று சொன்னார். எனவே அவன் முஸ்லிமாகிவிட்டான். இந்தச் சிறுவனை (நரக) நெருப்பை விட்டும் காப்பாற்றிய அல்லாஹுதஆலாவுக்கே எல்லாப் புகழும்!'' என்று கூறியவர்களாக நபி (ஸல்) அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறினார்கள். (நூல்:புக...