துஆ கண்டிப்பாக ஏற்கப்படும்
بسم الله الرحمن الرحيم
عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: مَاعَلَي اْلاَرْضِ مُسْلِمٌ يَدْعُو اللهَ تَعَالَي بِدَعْوَةٍ إِلاَّ آتَاهُ اللهُ إِيَّاهَا أَوْ صَرَفَ عَنْهُ مِنَ السُّوءِ مِثْلَهَا مَالَمْ يَدْعُ بِمَاْثَمٍ أَوْ قَطِيعَةِ رَحِمٍ فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ: إِذاً نُكْثِرُ قَالَ: اَللّهُ أَكْثَرُ.
رواه الترمذي
பூமியில் எந்த முஸ்லிமும் அல்லாஹுதஆலாவிடம் பாவமற்ற, உறவுமுறையைத் துண்டிக்காத காரியங்களுக்காக துஆக்கேட்டால், அல்லாஹுதஆலா அவருக்கு அவர் கேட்டதையே தந்துவிடுகிறான். அல்லது அந்த துஆவினால் அவருக்கு வர இருந்த சிரமத்தை அவருடைய துஆவுடைய அளவுக்கு நீக்கி விடுகிறான். அல்லது அவருடைய துஆவுக்குச் சமமான கூலியைச் சேமிப்பாக ஆக்கி விடுகிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, அவ்வாறென்றால், (துஆ நிச்சயம் கபூலாகிறது, அல்லது அதற்கு பதிலாக ஏதாவதொன்று கிடைத்துவிடுகிறது என்றால்) நாங்கள் அதிகமாக துஆச் செய்வோம்! என்று ஒருவர் சொன்னார். அல்லாஹுதஆலாவும் மிக அதிகமாகக் கொடுப்பவன்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹஜ்ரத் உபாதத்துப்னு ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்:திர்மிதீ)
Comments
Post a Comment