அல்லாஹ்வின் கருணை

 بسم الله الرحمن الرحيم 


عَنِ ابْنِ عَبَّاسٍ ؓ عَنِ النَّبِيِّ ﷺ فِيْمَا يَرْوِيْ عَنْ رَبِّهِ قَالَ: قَالَ: اِنَّ اللهَ كَتَبَ الْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ ثُمَّ بَيَّنَ ذلِكَ، فَمَنْ هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللهُ لَهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً، فَاِنْ هَمَّ بِهَا وَعَمِلَهَا كَتَبَهَا اللهُ لَهُ عِنْدَهُ عَشْرَ حَسَنَاتٍ اِلَي سَبْعِ مِائَةِ ضِعْفٍ اِلَي اَضْعَافٍ كَثِيْرَةٍ، وَمَنْ هَمَّ بِسَيِّئَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللهُ لَهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً، فَاِنْ هُوَ هَمَّ بِهَا فَعَمِلَهَا كَتَبَهَا اللهُ لَهُ سَيِّئَةً وَاحِدَةً

رواه البخاري


நன்மை, தீமைகளை எழுதுவதில், அல்லாஹுதஆலா மலக்குகளுக்கு ஒரு கட்டளை பிறப்பித்துள்ளான்'' என்று கூறிவிட்டு, ஒருவர் ஒரு நற்செயல் செய்ய நாடினார். பிறகு, (ஏதேனுமொரு காரணத்தால்) செய்ய முடியவில்லையென்றால் அல்லாஹுதஆலா அவருக்கு முழுமையான ஒரு நன்மையை எழுதுகிறான். அவர் நற்செயல் செய்ய நாடியபின் அதைச் செய்துவிட்டால், அவருக்கு அல்லாஹுதஆலா பத்து நன்மையிலிருந்து எழுநூறு வரை, அதைவிடவும் அதிகமாக-பன்மடங்காக எழுதுகிறான். ஒருவன் தீயசெயல் செய்ய நினைத்து, பிறகு அதைவிட்டு விலகிவிட்டா றென்றால், அல்லாஹுதஆலா அவருக்கு முழுமையான ஒரு நன்மையை எழுதுகிறான். (தீயதை விட்டும் விலகி இருந்தது அல்லாஹுதஆலாவின் பயத்தின் காரணமாகலாம்) அவன் பாவம் செய்ய நாடி அந்தப் பாவத்தைச் செய்துவிட்டால் அல்லாஹுதஆலா அவனுக்கு ஒரு தீமையை மட்டுமே எழுதுகிறான்'' என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(நூல்:புகாரி)

Comments

Popular posts from this blog

நபிக்கு கொடுக்கப்பட்ட சூராக்கள்

நகை கடை வைப்பது எப்படி

குர்ஆனை கற்றவர்