பாங்குக்கு பதில் சொல்லுங்கள்

 بسم الله الرحمن الرحيم 


عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ يَقُولُ: كُنَّا مَعَ رَسُولُ اللهِ ﷺ، فَقَامَ بِلاَلٌ يُنَادِي فَلَمَّا سَكَتَ قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ قَالَ مِثْلَ هذَا يَقِيناً دَخَلَ الْجَنَّةَ.

رواه الحاكم


ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம் ஹஜ்ரத் பிலால் (ரலி) அவர்கள் பாங்கு சொல்ல எழுந்தார்கள், பாங்கு சொல்லி முடிந்ததும் நபி (ஸல்) அவர்கள், எவர் உறுதியான நம்பிக்கையுடன் முஅஃத்தின் சொல்லும் வார்த்தைகளைத் தானும் சொல்கிறாரோ அவர் சுவனத்தில் நுழைவார்'' என்று சொன்னார்கள்.

(நூல்:முஸ்தத்ரக் ஹாகிம்)


பாங்குக்கு பதில் சொல்பவர் முஅஃத்தின் கூறும் வார்த்தைகளையே திரும்பச் சொல்லவேண்டும் என்று இந்த அறிவிப்பின் மூலம் விளங்குகிறது. ஆயினும், ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களின் அறிவிப்பில் ஹய்ய அலஸ்ஸலாஹ் மற்றும் ஹய்ய அலல்ஃபலாஹ்விற்கு பதிலாக லா ஹவ்ல வ லா குவ்வத இல்லா பில்லா என்று சொல்லவேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது. (முஸ்லிம்)

Comments

Popular posts from this blog

நபிக்கு கொடுக்கப்பட்ட சூராக்கள்

நகை கடை வைப்பது எப்படி

குர்ஆனை கற்றவர்