ஜனாஸா தொழுகையின் நன்மை
بسم الله الرحمن الرحيم
عَنْ اَبِيْ هُرَيْرَةَؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: مَنِ اتَّبَعَ جَنَازَةَ مُسْلِمٍ اِيْمَانًا وَاحْتِسَابًا وَكَانَ مَعَهُ حَتَّي يُصَلَّي عَلَيْهَا، وَيُفْرَغَ مِنْ دَفْنِهَا فَاِنَّهُ يَرْجِعُ مِنَ اْلاَجْرِ بِقِيْرَاطَيْنِ كُلُّ قِيْراطٍ مِثْلُ اُحُدٍ، وَمَنْ صَلَّي عَلَيْهَا ثُمَّ رَجَعَ قَبْلَ اَنْ تُدْفَنَ فَاِنَّهُ يَرْجِعُ بِقِيْرَاطٍ.
رواه البخاري
அல்லாஹுதஆலாவுடைய வாக்குறுதியின் மீது நம்பிக்கை கொண்டவராக வெகுமதி, மற்றும் சன்மானங்கள் மீது ஆர்வமும் கொண்டவராக எவர் ஒரு முஸ்லிமின் ஜனாஸா உடன் சென்று, ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொண்டு, ஜனாஸாவை அடக்கம் செய்யப்படும்வரை கூடவே இருப்பாரோ, அவர் இரு கீராத் நன்மை பெற்றுத் திரும்புகிறார். ஒவ்வொரு கீராத்தும் உஹது மலைக்குச் சமமாகும். ஒருவர் ஜனாஸாத் தொழுகை தொழுதுவிட்டு (அடக்கம் செய்யப்படும் முன்) திரும்பிவிட்டால், அவர் ஒரு கீராத் நன்மை பெற்றுத் திரும்புகிறார்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நூல்:புகாரி)
Comments
Post a Comment