நபியின் ஐந்து வார்த்தைகள்

 بسم الله الرحمن الرحيم 


عَنْ أَبِي مُوسَي اْلاَشْعَرِيِّؓ قَالَ: قَامَ فِينَا رَسُولُ اللّٰهِؐ بِخَمْسِ كَلِمَاتٍ فَقَالَ: إِنَّ اللّٰهَ لاَيَنَامُ وَلاَيَنْبَغِي لَهُ أَنْ يَنَامَ، يَخْفِضُ الْقِسْطَ وَيَرْفَعُهُ، يُرْفَعُ إِلَيْهِ عَمَلُ اللَّيْلِ قَبْلَ عَمَلِ النَّهَارِ، وَعَمَلُ النَّهَارِ قَبْلَ عَمَلِ اللَّيْلِ، حِجَابُهُ النُّورُ لَوْكَشَفَهُ لاَحْرَقَتْ سُبُحَاتُ وَجْهِهِ مَاانْتَهَي إِلَيْهِ بَصَرُهُ مِنْ خَلْقِهِ.

رواه مسلم


1. அல்லாஹ் உறங்குவதில்லை, உறக்கம் அவனுக்குப் பொருத்தமானதும் இல்லை 2. அவன் இரணத்தைக் குறைக்கவும், அதிகரிக்கவும் செய்கிறான் 3. இரவில் செய்யப்படும் செயல்கள் (அனைத்தும் அடுத்து வரும்) பகலின் செயல்களுக்கு முன்னால் 4. பகலில் செய்யப்படும் செயல்கள் (அனைத்தும் அடுத்து வரும்) இரவின் செயல்களுக்கு முன்னால் அவன் பக்கம் உயர்த்தப்பட்டு விடுகின்றன 5. (அவனுக்கும் படைப்பினங்களுக்கும் இடையே உள்ள) அவனது திரையாகிறது ஒளியினால் ஆனதாகும். ஒருவேளை அவன் அத்திரையை அகற்றினால் அவனது படைப்புகளில் எவற்றின் பார்வை அவன் பக்கம் திரும்புமோ அவையனைத்தையும் அவனது திருமுகத்தின் பிரகாசங்கள் எரித்துவிடும்’’ என்ற ஐந்து வாக்கியங்களை ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குச் சொன்னார்கள் என்று ஹஜ்ரத் அபூமூஸா அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(நூல்:முஸ்லிம்)

Comments

Popular posts from this blog

நபிக்கு கொடுக்கப்பட்ட சூராக்கள்

நகை கடை வைப்பது எப்படி

குர்ஆனை கற்றவர்