சுவனத்தில் நுழைவிக்கும் அமல்

 بسم الله الرحمن الرحيم 


عَنْ أَبِي هُرَيْرَةَؓ أَنَّ أَعْرَابِيّاً أَتَي النَّبِيَّؐ فَقَالَ: دُلَّنِي عَلَي عَمَلٍ إِذَا عَمِلْتُهُ دَخَلْتُ الْجَنَّةَ، قَالَ: تَعْبُدُ اللّٰهَ لاَ تُشْرِكُ بِهِ شَيْئاً، وَتُقِيمُ الصَّلاَةَ الْمَكْتُوبَةَ، وَتُؤَدِّي الزَّكَاةَ الْمَفْرُوضَةَ، وَتَصُومُ رَمَضَانَ، قَالَ: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لاَ أَزِيدُ عَلَي هذَا، فَلَمَّا وَلَّي قَالَ النَّبِيُّؐ : مَنْ سَرَّهُ أَنْ يَنْظُرَ إِلَي رَجُلٍ مِنْ أَهْلِ الْجَنَّةِ فَلْيَنْظُرْ إِلَي هذَا.

رواه البخاري


ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “கிராமவாசி யொருவர், அருமை நபி (ஸல்) அவர்களின் சமூகத்திற்கு வந்து, “அல்லாஹ்வின் திருத்தூதரே, என்னைச் சுவனத்தில் நுழையச் செய்யும் செயலைக் கற்றுத் தாருங்கள்!’ என்று கேட்டார். “அல்லாஹ்வை வணங்குவீராக! அவனுக்கு யாரையும் இணையாக்காதிருப்பீராக! பர்ளுத் தொழுகைகளை நிலை நிறுத்துவீராக! பர்ளான ஜகாத்தை நிறைவேற்றுவீராக! ரமளான் மாதம் நோன்பு வைப்பீராக!’ என்று சொன்னார்கள். அந்தக் கிராமவாசி, “என்னுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணை! (தாங்கள் கூறிய அமல்களை சொன்னபடி செய்து வருவேன்) இவற்றில் எதையும் அதிகரிக்கமாட்டேன்’’ என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றுவிட்டார். “யாரேனும் சுவனவாசியைக் காணவிரும்பினால் இவரைக் கண்டு கொள்ளட்டும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(நூல்:புகாரி)

Comments

Popular posts from this blog

நபிக்கு கொடுக்கப்பட்ட சூராக்கள்

நகை கடை வைப்பது எப்படி

குர்ஆனை கற்றவர்